Saturday, February 23, 2013

இளைய தலைமுறைக்காக!

.
அஸ்ஸலாமு அலைக்கும் வர்ரஹமதுல்லாஹி வபரகாத்துஹூ.........

இளைய தலைமுறைக்காக! 

உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
 
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 
 
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

நபிமார்களானாலும் நல்லடியார்களானாலும் இறையருள் பிரமிக்க வைக்கும் அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் வழிகாட்டும் வரலாறுகளாய் ஆனது அவர்கள் இளமையில் வளர்த்த செயல்திட்டங்களேயாம்

இஸ்லாமிய மாhக்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா இளைஞர்களைக் கொண்டு தான் தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறான். மேலும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு தன்னுடைய வேதப்புத்தகத்திலே பல நபிமார்களின் வரலாறுகள் மூலமாக கற்றும் தருகிறான். மேலும் இந்த உலகில் நம்மை படைத்த இறைவன் நாம் மரணித்தப் பின் கேள்வி கேட்கப்படும் நாளில் எழுப்பப்படும்போது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற தன்னுடைய திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூலமாக எச்சரிக்கையும் செய்கிறான்.
 
மறுமை நாளில் ஒரு மனிதன் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் அவனது கால்கள் அவன் நின்ற இடத்;தை விட்டு அகலாது. 1.வாழ்நாளை எப்படி கழித்தாய். 2.உன் இளமையை எப்படி செலவழித்தாய் 3,4. எவ்வாறு சம்பாதித்தாய்: எப்படி செலவழித்தாய் 5.கல்வியை எந்த வழியில் பயன்படுத்தினாய் என்ற கேட்கப்படும்.(புகாரி முஸ்லிம்)
 
இந்த ஐந்து கேள்விகளில் ஒன்றுதான் கொடுக்கப்பட்ட இளமையை எப்படி செலவு செய்தோம். அல்லாஹ்வின் பாதையில் கழித்தோமா? அல்லது வீணடித்தோமா? 
 
ஆனால் இன்றைய இளைஞன் அந்தோ பரிதாபம்! தன்னுடைய இலக்கு என்ன? நாம் பயணிக்க வேண்டிய பாதை எது? என்பதை தெரிந்து கொள்ளாமல் நடிகர்களின் பின்னாலும் நடிகைகளின் பின்னாலும் சென்று கொண்டிருக்கும் அவலம்.ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்ணியமிக்க அல்லாஹ் அழகான வரலாற்றின் மூலம் சொல்லிக் காண்பிக்கிறான்.  
 
கேட்போருக்கு யூசுப்பிடமும் அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.(12:7) 
 
என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து விடுவேன் என்றார். (12:33)
 
அல்லாஹ்வின் தூதரான யூசுப் (அலை) அவர்கள் எந்த வீட்டில் வளர்ந்தார்களோ, யார் அவர்களை வளர்த்தாரோ அந்த பெண் அவரை தன்னுடைய இச்சைக்கு இசையுமாறு அழைக்கும் போது, அவர்கள் அல்லாஹ்வின் பயத்தால் அந்த தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை விட்டும் விலகுகிறார்கள். அந்த பெண்களின் சூழ்ச்சியை விட சிறைச்சாலை தனக்கு நல்லது என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான். 
 
ஆனால் இன்றோ, கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் பெற்றோர்கள் எவ்வளவு சிரமம் கொண்டு தங்களை படிக்க வைக்கின்றார்கள் அதற்காக அவர்கள் சிந்தும் தியாகங்கள் என்னவென்றெல்லாம் சிந்திக்காமல் தன்னோடு படிக்கும் சக மாணவிகளை காதலித்து படிக்கின்ற காலத்தில் பெற்றோர்களை தவிக்க வைத்து விட்டு ஒடிப் போய் அதனால் சிறைச்சாலைக்கு சென்று தியாகி பட்டத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
அதே போல் சாதிக்க வேண்டிய இளைஞர்கள் சாதித்துக் காட்டிட வேண்டிய பருவத்தில் தங்களின் பொன்னான நேரங்களை மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் கன்னியரின் கடைக்கண் பார்வைக்காக  காத்துக்கிடக்கும் அவலம்.
 
மேலும் யூசுப் (அலை) அவர்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றார்கள். அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும்போதுகூட எப்போது விடுதலையாவோம் என்று கவலைப்படாமல் அவர்கள் அங்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி அழைத்தது சரியான முன்தமாதிரி   அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவரில் ஒருவன் நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினான். மற்றவன், நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும் அதிலிருந்துபறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன் என்று கூறினான்.(பின் இருவரும் யூசுபே) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக: மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கின்றோம். 
 
அதற்கு அவர் கூறினார்: உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்துசே)ருவதற்கு முன்னரும் (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறி விடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.   12: 36 –37) 
 
தன்னிடம் கனவுக்கு விளக்கம் கேட்டவர்களிடம் கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தான் யார், தன்னுடைய கொள்கை என்னவென்பதை தெளிவாகக் கூறி விடுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ? மேலும்,  என் முன்னோர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும் மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள், எனினும் அநேகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை. 
 
(12:38)
 
என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (12:39) 
 
தன்னோடு சிறைச்சாலையில் இருக்கும் தோழர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் முன், தனக்கு கிடைத்த வாய்ப்பை தருணத்தை எதிர்பார்த்ததுபோல் அவர்களிடம் ஏக இறைவனைப் பற்றி அழகான முறையில் எடுத்தியம்பியதை இன்றைய இளைஞர்கள் சதா தொலைபேசியிலும், வலைதளங்களிலும் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்;தை வீணடிப்பதை பார்க்க முடிகிறது. 
 
மேலும் இன்றைய இளைஞர்கள் சமுதாயச் சேவைகளில் ஈடுபடுகிறோம், மார்க்கத்தைப் போதிக்கின்றோம் என்கிற ஆவலில் செயல்படுவதை காண்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களின் வழிகாட்டிகளாக சமுதாயத்தை ஏமாற்றுபவர்களையும், தங்களின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாகயிருக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களையும் எற்றுக் கொண்டு தங்களின் இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் வீணடித்துக் கொள்கின்றனர். 

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்:
 
நிச்சயமாக இப்ராஹிம் ஒரு சமுதாயமாகவும்,  அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராகவும் உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16: 120) 
 
தான் அறிந்துகொண்ட இறைவனை அந்த ஏக நாயனை தன்னைச் சார்ந்த சமூகமும் தன்னுடைய தகப்பனும் வணங்காமல் பல கடவுள்களையும் சிலைகளையும் வணங்கி வந்ததை கண்டு பொறுக்க இயலாமல் அதனால் எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இளமைப்பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டதை அல்லாஹ் பெருமைப்படுத்திச் சொல்வதை திருக்குரானில் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
 
இப்ராஹிமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். எனது வழித்தோன்றல்களிலும்(தலைவர்களை ஆக்குவாயாக) என்ற அவர் கேட்டார். என் வாக்குறுதி (எமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்ற அவன் கூறினான்(அல்குர்அன் 2:124)
 
மேலும் அன்றைய இளைஞர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும், அதனால் கிடைக்கும் மறுமைப்பலனையும் மட்டுமே தங்களின் வாழ்வின் குறிக்கோளாக கொண்டனர்.
 
ஜுலைபிப்(ரலி) என்கிற நபித்தோழர் முதலிரவன்று தன் மனைவியுடன் இருந்த போது உஹது போருக்கு அல்லாஹ்வின் தூதரின் அழைப்பு வர, பதிதாக திருமணம் முடிந்திருக்கிறது என்ற பார்க்காமல் மனைவியை விட்டு பிரிந்து சென்று உஹதுப் போரில் ஷஹிதாக்கப்படுகிறார்கள்.
 
ஏன்? என்ன காரணம்? மறுமைக்குப் பின் உள்ள வாழ்வு வெற்றியடைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்கிற ஆவல்தான்.ஆனால் இன்றைய இளைஞனோ தொழுகைக்குக் கூட பள்ளிக்கு வராமல் தன்னுடைய மறுமை வாழ்வை தொலைபேசியில் தொலைத்துக் கொண்டிருக்கின்றான். 
 
இப்படி அன்று சொர்க்கத்திற்காக வாளேந்தினார்கள். ஆனால் இன்று ஜிஹாத் எனும் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக தவறுகளை சுட்டிக் காட்டும் சகோதரர்களை தாக்குவதும், மிரட்டுவதும் இவர்களின் அழைப்புப் பணியாக உள்ளது. அது மட்டுமின்றி தங்களின் வாழ்வை இஸ்லாத்திற்கு முரணான வழிகளில் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றி தங்களை நரகின் விறகாக ஆக்கிக் கொள்ளும் அவலநிலையும் அடங்கி விடுகிறது. 
 
அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக தன்னுடைய செல்வ செழிப்பான வாழ்வை தூக்கி எறிந்து விட்டு, ஏழ்மையான வாழ்வை தேர்வு செய்து கொண்டது மட்டுமல்லாமல், மதினாவில் இஸ்லாத்தைக் கொண்டு சென்றதும் அந்த இளமையில் தான்! அதேபோல் அல்லாஹ்வின் ஒளி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன்னுயிரை உஹது போரில் நீத்த உத்தமர்கள் இந்த இளம் சஹாபாக்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். 
 
ஆகவே அருமை இளவல்களே! இப்பேர்ப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை வழிகாட்டியாக கொண்டு நம்முடைய இளமைப் பருவத்தை வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் வீணடிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டு மறுமை வெற்றிக்கு பாதையாக்கி கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக! 
 
நன்றி: துபை TNTJ

தன்னிடம் கனவுக்கு விளக்கம் கேட்டவர்களிடம் கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தான் யார், தன்னுடைய கொள்கை என்னவென்பதை தெளிவாகக் கூறி விடுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ? மேலும், என் முன்னோர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும் மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள், எனினும் அநேகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை. (12:38)

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (12:39) 

தன்னோடு சிறைச்சாலையில் இருக்கும் தோழர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் முன், தனக்கு கிடைத்த வாய்ப்பை தருணத்தை எதிர்பார்த்ததுபோல் அவர்களிடம் ஏக இறைவனைப் பற்றி அழகான முறையில் எடுத்தியம்பியதை இன்றைய இளைஞர்கள் சதா தொலைபேசியிலும், வலைதளங்களிலும் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்;தை வீணடிப்பதை பார்க்க முடிகிறது. 

மேலும் இன்றைய இளைஞர்கள் சமுதாயச் சேவைகளில் ஈடுபடுகிறோம், மார்க்கத்தைப் போதிக்கின்றோம் என்கிற ஆவலில் செயல்படுவதை காண்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களின் வழிகாட்டிகளாக சமுதாயத்தை ஏமாற்றுபவர்களையும், தங்களின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாகயிருக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களையும் எற்றுக் கொண்டு தங்களின் இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் வீணடித்துக் கொள்கின்றனர். 

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்:

நிச்சயமாக இப்ராஹிம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராகவும் உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16: 120) 

தான் அறிந்துகொண்ட இறைவனை அந்த ஏக நாயனை தன்னைச் சார்ந்த சமூகமும் தன்னுடைய தகப்பனும் வணங்காமல் பல கடவுள்களையும் சிலைகளையும் வணங்கி வந்ததை கண்டு பொறுக்க இயலாமல் அதனால் எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இளமைப்பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டதை அல்லாஹ் பெருமைப்படுத்திச் சொல்வதை திருக்குரானில் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
இப்ராஹிமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். எனது வழித்தோன்றல்களிலும்(தலைவர்களை ஆக்குவாயாக) என்ற அவர் கேட்டார். என் வாக்குறுதி (எமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்ற அவன் கூறினான்(அல்குர்அன் 2:124)

மேலும் அன்றைய இளைஞர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும், அதனால் கிடைக்கும் மறுமைப்பலனையும் மட்டுமே தங்களின் வாழ்வின் குறிக்கோளாக கொண்டனர்.

ஜுலைபிப்(ரலி) என்கிற நபித்தோழர் முதலிரவன்று தன் மனைவியுடன் இருந்த போது உஹது போருக்கு அல்லாஹ்வின் தூதரின் அழைப்பு வர, பதிதாக திருமணம் முடிந்திருக்கிறது என்ற பார்க்காமல் மனைவியை விட்டு பிரிந்து சென்று உஹதுப் போரில் ஷஹிதாக்கப்படுகிறார்கள்.

ஏன்? என்ன காரணம்? மறுமைக்குப் பின் உள்ள வாழ்வு வெற்றியடைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்கிற ஆவல்தான்.ஆனால் இன்றைய இளைஞனோ தொழுகைக்குக் கூட பள்ளிக்கு வராமல் தன்னுடைய மறுமை வாழ்வை தொலைபேசியில் தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.

இப்படி அன்று சொர்க்கத்திற்காக வாளேந்தினார்கள். ஆனால் இன்று ஜிஹாத் எனும் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக தவறுகளை சுட்டிக் காட்டும் சகோதரர்களை தாக்குவதும், மிரட்டுவதும் இவர்களின் அழைப்புப் பணியாக உள்ளது. அது மட்டுமின்றி தங்களின் வாழ்வை இஸ்லாத்திற்கு முரணான வழிகளில் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றி தங்களை நரகின் விறகாக ஆக்கிக் கொள்ளும் அவலநிலையும் அடங்கி விடுகிறது.

அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக தன்னுடைய செல்வ செழிப்பான வாழ்வை தூக்கி எறிந்து விட்டு, ஏழ்மையான வாழ்வை தேர்வு செய்து கொண்டது மட்டுமல்லாமல், மதினாவில் இஸ்லாத்தைக் கொண்டு சென்றதும் அந்த இளமையில் தான்! அதேபோல் அல்லாஹ்வின் ஒளி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன்னுயிரை உஹது போரில் நீத்த உத்தமர்கள் இந்த இளம் சஹாபாக்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும்.

ஆகவே அருமை இளவல்களே! இப்பேர்ப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை வழிகாட்டியாக கொண்டு நம்முடைய இளமைப் பருவத்தை வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் வீணடிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டு மறுமை வெற்றிக்கு பாதையாக்கி கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக!

நன்றி: துபை TNTJ

Friday, January 25, 2013

குஜராத் எப்படி ஒளிர்கிறது பாருங்கள் சதவிகித கணக்குகளுடன்

 வெற்றியும்..தோல்வியும் மட்டும் ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிப்பதில்லை...தன்னிகரில்லா தலைவர், கர்ம வீரர் காமராஜர் தேர்தலில் தோற்றவர்தான்

                                                             குஜராத் ஒளிர்கிறது
                                                      மோடி ஓர் மாயத்தோற்றம்

மோடி நல்லவரா, கெட்டவரா திறமையானவரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவே இல்லை.. 3 வது முறை மோடி வெற்றி பெற்றிருக்கிறார்...என்பதால் அவர் மிகத் திறமையானவர் என்று இன்று தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை அத்துனை பேரும் அதைக் கொண்டாடுவதுதான் ஆச்சரியம்...33 வருடம் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு முதலமைச்சராக இருந்தாரே..ஏன் அவரை அடுத்த பிரதமர் என்று யாரும் சொல்லவில்லை..ஏன் அது பற்றி எந்த ஊடகங்களும் பேச வில்லை...தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு...ஆனால் இதுவரை அவர் ஒரு தேர்தலில் கூட தோற்றதில்லையே...இதைப் பற்றி நாம் பேசுகிறோமா...வெற்றியும்..தோல்வியும் மட்டும் ஒருவர் நல்லவர் கெட்டவர் என்பதை தீர்மானிப்பதில்லை...தன்னிகரில்லா தலைவர், கர்ம வீரர் காமராஜர் தேர்தலில் தோற்றவர்தான்...ஆனால் அவர் மீது யாராவது விமர்சனம் வைக்க முடியுமா இன்று வரை...ஆக வெற்றி தோல்வி என்பதல்ல முக்கியம்..அடுத்து குஜராத்தைப் பற்றியும் மோடியைப் பற்றியும் விமர்சிப்பவர்கள் எல்லோரும் குஜராத்திற்கு போனவர்கள் அல்லர் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவரை பாராட்டுபவர்களும் குஜராத்திற்குப் போனதில்லை என்பதே நிதர்சனம்..ஆக இங்கு திட்டமிட்டே ஒரு விசயத்ததை அனைவரும் செய்கின்றனர்...மோடியை தேசியத் தலைவராக உருவாக்குவதற்கான முயற்சியை மிகவும் வீரியமாகச் செய்கின்றனர்..அதற்கு ஊடகங்களும் துணைபோவதுதான் வேதனை...

"மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துத் துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், இப்படி ஓர் ஆள் கிடைத்தால் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ!. குஜராத் போல நல்லாட்சி இந்தி யாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் மோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து வேட்டு!.
மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20.
வருமான அடிப்படையில் ஆறாவது இடம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4வது இடம்.
தனிநபர் வருமான அடிப்படை யில் 9ஆவது இடம். பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்.
கல்வியில் 14வது இடம்.
மின் உபயோகத்தில் 10ஆம் இடம்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர் வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண் கள் 12ஆம் இடம்.
பெண்கள் 15ஆம் இடம்.
சரியான உடல் எடை விகிதத் தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடம்.
மொத்த சாலைகளின் நீளத் தில் 10ஆம் இடம்.
சாலைகளின் அடர்த்தி விஷ யத்தில் 21வது இடம்.
மின் நிலைய நிர்மாண இடத் தில் 2வது இடம்.
மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில் 8வது இடம்.
சராசரி வாழ்நாளின் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.
ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலத் திற்கு உற்பத்தியில் நான்காம் இடம்.

இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான் இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் மயக்க மிட்டாய் கொடுக்கிறது.-----------நன்றி-கீற்று

Thursday, January 24, 2013

கொசுக்களை ஒழிக்க ஒரு புதிய எளிய வழி!

  கொசுக்களை ஒழிக்க ஒரு புதிய எளிய வழி!

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை
ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

Friday, January 4, 2013

ஏன் நடக்கிறது கற்பழிப்பு ஒரு ஆராய்ச்சி

கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது

நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது

இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.

இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்துதுடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரதச்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

Monday, December 31, 2012

பிரபல பிலிப்பைன் நடிகை குயின் படெல்லா இஸ்லாத்தை தழுவினார்.............!!

                           எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

பிரபல பிலிப்பைன் நடிகை குயின் படெல்லா இஸ்லாத்தை தழுவினார்..!!

                           இறைவனின் மாபெரும் கிருபையினால் பிலிப்பை

இறைவனின் மாபெரும் கிருபையினால் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகையான குயின் படெல்லா புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

அவர் இஸ்லாத்திற்கு மாறிய பின் இஸ்லாம் கூறியுள்ள பர்தா அவருக்கு முழுமையான பாதுகாப்பை தருவதாக கூறியுள்ளார், மேலும் இஸ்லாத்தை பற்றிய பல்வேறு சுவாரஷ்யங்களை கூறியுள்ளார்.

Sunday, December 30, 2012

எளிமையின் அடையாளம் ஈரான் அதிபர் அஹமத் நஜாதி

                    இவரு யாருன்னு உங்களுக்கு தெரியுமா ?  
அமெரிக்கா,இஸ்ரேல்,இங்கிலாந்து போன்ற நாடுகள் பார்த்து பயப்படும்     ஈரான் அதிபர் அஹமத் நஜாதி (கிழிந்த சட்டையுடன்)
                 எளிமையின் அடையாளம் ஈரான் அதிபர்   

                                     அஹமத் நஜாதி

                                       கிழிந்த உடையுடன் ஒரு நாட்டின் அதிபர்

                                                     ஏழைகளுடன் விருந்து                                                      

                                          சதாரண மக்களை அரவணைப்பதில்

பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறுப்புஇது பற்றி மக்கள் கருத்து

30/12/12
பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க முடியாது மதுரை ஆதினம் மறுப்பு............!!

பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக, இந்தியப் பெண்கள் அனைவரும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிய மதுரை ஆதினகர்த்தர் பரிந்துரைத்திருந்தார். அருணகிரிநாதரின்இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு கேட்கும் படி கோரியிருந்தது.

ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.

--------------------------------------

மக்கள் கருத்து :

பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை,

பாஜக வினர் சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்த்தது, பாஜக அலுவலகத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து காமலீளைகளுக்கும் பின்னணியில் பாஜக வும், இன்னபிற இந்துத்துவ இயக்கங்களும் இருப்பதால்....

மேற்கொண்டு இந்திய பெண்களின் வாழ்வை சீரழிக்க பர்தா தடையாகி விடும் என்ற அச்சத்தில் பாஜக வே பெண்கள் அமைப்பை ஏவி விடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்,

பாஜக வின் காமலீலைகள் புரியாத பெண்களும் போராட்டம் என்ற பெயரில் சீன் போடுவது வருந்ததக்கது