Friday, January 4, 2013

ஏன் நடக்கிறது கற்பழிப்பு ஒரு ஆராய்ச்சி




கற்பழிப்பு ஏன் நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் பல தவறுகள் நம்மிடமே இருக்கின்றது

நம் முன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவம் ஏற்பட்டது

இன்றைய சூழ்நிலை அவ்வாறு இல்லை பெண்ணுக்கு 20-25 வயதிலும் ஆணுக்கு 25-30 வயதிலும் திருமணம் நடக்கிறது. மேலும் இன்றைய கால இளைஞர்களோ காலம் பாராமல் உழைக்கிறார்கள். அன்றைய காலத்தில் உடல் உளைச்சல் அதிகம் இருந்தது இன்றைய கால கட்டத்திலோ மன உளைச்சல் அதிகமா இருக்கிறது .. மேலும் பணம் மற்றும் வேலைக்காக பெற்றோரை விட்டு தனிமை படுத்தப்படுகிறார்கள். அதற்க்கு மேல் தொலைகாட்சிகள், திரைப்படங்கள் செக்ஸ் மற்றும் காதலையே மையமாக கொண்டு உள்ளது.

அந்த காலத்தில் தேவதாசி முறை என்று இருந்துகிறது இந்த காலத்திலும் இருக்கிறது மேலும் பல நோய்களும் இருக்கிறது இக்காலத்தில்.

மேலும் இணையம் தொட்ட இடமெல்லாம் செக்ஸ், நிர்வாண படங்கள், காட்சிகள்.

இதற்க்கு எல்லாம் காரணம் பணம்.

பணம் இருக்கிறவன் தனக்கு தேவையானதை செலவழித்து பெற்று கொள்கிறான். இல்லாதவன் பெற்றோரால் கண்டிப்புடன் வளர்க்க பட்டவனோ எவ்வாறு அடையலாம் என்பதை சிந்திக்கிறான். அவன் மனதிற்கு வலு கொடுப்பதோ மது மற்றும் தனிமை.

இது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் பொருந்தும்

ஏன் ஆண்களை மற்றும் குற்றவாளிகளாக காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

எத்தனை இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) தங்களது உறவினர்களால் தினமும் வீட்டில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த படுகிறார்கள். நாளாக நாளாக தங்களுது தொல்லைகளை கூட்டிக்கொண்டே போகிறார்கள். கையை தொடுவதில் ஆரம்பித்து செக்ஸ்க்கு இணங்க வைப்பது வரை.

இதற்கு எல்லாம் காரணம் மனம் மற்றும் தனிமை. நண்பர்களே உங்கள் மனதை வலிமை படுத்துங்கள் . தனிமையை தவிர்துதுடுங்கள். எவ்வாறு

1.நண்பர்களுடன் பேசுங்கள். இணையத்தை தவிர்த்துடுங்கள்.(தேவைக்கு மட்டும் இணையத்தை உபோயோகிங்கள்)

2. பெற்றோர் உடன் மனம் விட்டு பேசுங்கள். பெற்றோர்களே குழந்தைகளும் மனம் மற்றும் உணர்ச்சிகள் இருக்கிறது என்று சிந்தியுங்கள்

3. பெற்றோர்களே குழந்தைகளை தனிமை படுத்தாதிர்கள். பணம் முக்கியமில்லை இருக்கிறது ஒரு வாழ்க்கை உங்கள் குழந்தைகளுடன் செலவழியுங்கள் உங்கள் பொன்னான நேரத்தை.

4. பெரும்பாலும் குழந்தைகள் முன்னால் உங்கள் ஊடல்களை தவிர்த்துடுங்கள்.

5. 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்

6. நண்பர்களுடன் விளையாடுங்கள்

7. உங்களுடன் பழகுபவர்களை சகோதர சகோதிரகளாய் சிந்தியுங்கள்

8. பணம் ஒரு பெரிய விஷயம் அல்ல. வாழ்கையில் இருக்கிறதை வைத்து சந்தோசமாக வாழ வழியை தேடுங்கள்.

9. தயவு செய்து வரதச்சனை வாங்குவதோ கொடுப்பதோ தவிருங்கள்.

10. எவரும் நல்லவர் இல்லை. ஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..

செக்ஸ் என்பது எல்லோர்க்கும் ஏற்படும் ஒரு இயல்பான உணர்ச்சி. அதற்கனே சில வழிமுறைகள் இருக்கின்றன ஏனென்றால் நாம்
மனிதர்கள் ஆறறிவு கொண்டவர்கள்.

குழந்தைகளை குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.

நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்

1 comment: