குஜராத் ஒளிர்கிறது
மோடி ஓர் மாயத்தோற்றம்
மோடி நல்லவரா, கெட்டவரா திறமையானவரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவே இல்லை.. 3 வது முறை மோடி வெற்றி பெற்றிருக்கிறார்...என்பதால் அவர் மிகத் திறமையானவர் என்று இன்று தேசிய ஊடகங்கள் முதல் தமிழக ஊடகங்கள் வரை அத்துனை பேரும் அதைக் கொண்டாடுவதுதான் ஆச்சரியம்...33 வருடம் மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு முதலமைச்சராக இருந்தாரே..ஏன் அவரை அடுத்த பிரதமர் என்று யாரும் சொல்லவில்லை..ஏன் அது பற்றி எந்த ஊடகங்களும் பேச வில்லை...தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு...ஆனால் இதுவரை அவர் ஒரு தேர்தலில் கூட தோற்றதில்லையே...இதைப் பற்றி நாம் பேசுகிறோமா...வெற்றியும்..த
"மோடி அளவுக்கு சிறுபான்மை மக்களை வேட்டையாடும் இந்துத் துவ வெறியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், இப்படி ஓர் ஆள் கிடைத்தால் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புதானே! அதனால்தான் மோடிக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார் சோ!. குஜராத் போல நல்லாட்சி இந்தி யாவுக்குக் கிடைக்க வேண்டுமா? அப்படியானால் மோடியை இந்தியாவின் பிரதமராக்குங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்து வருகிறார். அப்படிப் பார்த்தாலும் அவர் கூறுவதாவது உண்மையா என்றால் அதுதான் இல்லை; எல்லாம் வெத்து வேட்டு!.
மனிதவள அடிப்படையில் இந்தியாவில் குஜராத்துக்கு உரிய இடம் - 20.
வருமான அடிப்படையில் ஆறாவது இடம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 4வது இடம்.
தனிநபர் வருமான அடிப்படை யில் 9ஆவது இடம். பாலின விகித அடிப்படையில் 22 ஆவது இடம்.
கல்வியில் 14வது இடம்.
மின் உபயோகத்தில் 10ஆம் இடம்.
தடுப்பூசி குறித்த விழிப்புணர் வுச் செய்திகளை அறிவோர் விகித அடிப்படையில் ஆண் கள் 12ஆம் இடம்.
பெண்கள் 15ஆம் இடம்.
சரியான உடல் எடை விகிதத் தில் ஆண்கள் 11ஆம் இடம், பெண்கள் 12ஆம் இடம்.
தொலைக்காட்சியுடையோர் கணக்கிட்டால் 11ஆம் இடம்.
மொத்த சாலைகளின் நீளத் தில் 10ஆம் இடம்.
சாலைகளின் அடர்த்தி விஷ யத்தில் 21வது இடம்.
மின் நிலைய நிர்மாண இடத் தில் 2வது இடம்.
மருத்துவமனையில் பிரசவம் நடக்கும் இடத்தில் 8வது இடம்.
சராசரி வாழ்நாளின் ஆயுள் அளவில் 10ஆம் இடம்.
ஏராளமான சலுகைகளை அளித்து அந்நிய முதலீட்டைக் கவருவதில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் இந்த மாநிலத் திற்கு உற்பத்தியில் நான்காம் இடம்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு மாநிலம்தான் இந்தியாவில் நல்லாட்சி நடக்கும் மாநிலமாம், மக்கள் வளமாக வாழும் மாநிலமாம். சோ கூட்டம் மயக்க மிட்டாய் கொடுக்கிறது.-----------நன்றி-கீற