Friday, October 19, 2012

தாய்பாலின் மகத்துவம்..!!!

தாய்பாலின் மகத்துவம்..!!!
தாய்பாலின் மகத்துவம்..!!!
தாய்பாலின் மகத்துவம்


(இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும்)

இன்று நிறைய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. ஒரு சில பெண்களைத் தவிர..மற்றப் பெண்களுக்கு வேலைக்கு போவது ஒரு காரணமாக இருக்கலாம், அவர்களின் எண்ணமும்.. பாலில் என்ன வந்தது டாக்டர் சொல்லும் புட்டிப் பாலை வாங்கி கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்.. ஆனால் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும், புட்டிப் பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும் அறிவுத் திறனில் வித்தியாசம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு ஒவ்வாமை, வலிப்பு போன்ற பிற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு..


தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும், அபரிதமான நோய் எதிர்ப்பு சக்தியும், எளிதில் செரிமானமாகக் கூடியத் தன்மையும் இருக்கிறது. நாம் புட்டிப் பாலை என்ன தான் விலை கொடுத்து வாங்கினாலும் இதற்கு ஈடு வராது. இது "அல்லாஹ்வின் அருட் கொடையாகும்".


மேலும் பாலூட்டும் தாய்க்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவு ஏற்படுகிறது.


ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு தாயின் கடமை. இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகாமல் இருப்பதே நல்லது..


ஆனால், எனக்கு பொருளாதாரப் பிரச்னை போய் தான் ஆக வேண்டும் என்றால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில அனுமதி பெற்று தகுந்த இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சி எடுங்கள். அது தான் இருவருக்கும் நல்லது..


நம் மார்க்கத்தில் திருமறையின் கூற்று தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் (குர்ஆன் 2: 233)

நம் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்க முடியாது. அதற்கு தகுந்த பதிலை நாம் சொல்லியாக வேண்டும்..


சமீபத்தில் ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என கண்டறிந்துள்ளனர்.


ஒவ்வொரு தாயும் தன குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்தோடும், நல்ல அறிவுக்கூர்மையோடும் இருப்பதை தான் விரும்புவாள். அதற்கு தாய்ப்பால் பெருமளவில் உதவுகின்றது என்றால் அது மிகையில்லை..


மாட்டுபால் கன்றின் தாய் பால் அது கன்றுக்கு மட்டுமே அறிவு புகட்டும்

No comments:

Post a Comment