Monday, October 22, 2012

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் அறிவிப்பு.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் 

அறிவிப்பு.............!!

அல்லாஹு அக்பர்............!! அல்லாஹு அக்பர்............!!

இஸ்லாத்தை ஏற்ற போது நான் பெற்ற அமைதி இன்னும் என்னை விட்டு விலகவில்லை, 
இனியும் விலகாது...............!!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் அறிவிப்பு.............!!

அல்ஹம்துலில்லாஹ்...............!!

எச்சரிகை எச்சரிகை பெற்றோர்களே எச்சரிக்கை!

  
எச்சரிகை  எச்சரிகை பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? 
16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

 இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்தவாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
 நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

கடந்த 2 மாதங்களில் மட்டும் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வடபகுதி மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,

செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு

Sunday, October 21, 2012

ஏழைகளை நேசிக்க 50 "வழிகள் தாவா செய்பவர்களுக்கு உபயோகமான வழி"


ஏழைகளை நேசிக்க 50 வழிகள்



தாவா செய்பவர்களுக்கு உபயோகமான வழி

1. ஏழைகளைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்போடும் மரியாதையோடும் அவர்களிடம் பேசுங்கள்.

2. அவர்களது பெயரைக் கேட்டு அவர்கள் குடும்பம் மற்றும் இல்லத்தைப் பற்றி விசாரியுங்கள். அவர்கள் தங்குமிடத்திற்கு விஜயம் செய்யுங்கள்.














3. பயணத்தின்போது கொடுக்க ஏழைகளுக்காகக் கூடுதல் ஒன்றிரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

4. சொந்தக் காரில் பயணம் செய்யும்போது சில பழைய, புதிய ஆடைகளைக் கொண்டு செல்லுங்கள். அனேகமாக வழியில் சில ஏழைகளைச் சந்திப்பீர்கள்.

5. உதவியற்றோருக்கு முகமலர்ச்சியுடன் கடன் கொடுங்கள்.

6. விதவைகள், பெண்கள், முதியவர், பெண் குழந்தைகள் போன்றோருக்கான அரசாங்கச் சலுகைகள் மற்றும் வங்கிக் கடன்களை விசாரித்தறிந்து ஏழைகளுக்கு அவை கிடைக்கச் செய்யுங்கள்.


7. தொழுநோயாளர், முதியோர், அநாதைகள், மனவளர்ச்சி குறைந்தோர், ஊனமுற்றோர்,ஊமை, செவிடர் மற்றும் குருடர் இல்லங்களைக் குறித்து விவரங்கள் சேகரித்து ஏழைகளை அங்கு சேர்த்துவிடுங்கள். இப்படிப்பட்ட சில
இல்லங்களுக்குக் கிரமமாகச் சென்று உதவி செய்யுங்கள்.


8. ஏழை மாணவர் படிப்பிற்குக் கல்விக் கட்டணம் கொடுத்துதவுங்கள்.

9. ஏழை மாணவருக்கு இலவச ட்யூஷன் எடுங்கள். கல்வியறிவற்றோருக்கு எழுதப்படிக்கக் கற்பியுங்கள். இளைஞர் முதியோருக்குங்கூட சேரிகளில் கிரமமான வகுப்புகள் துவங்கலாம்.

10. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஏழைப் பிள்ளைகளைத் தத்தெடுத்து கடவுளுக்காக வளர்க்கலாம். பிள்ளைகள் உடையவரும் தத்தெடுக்கத்
தடையில்லை!


11. திக்கற்றோருக்கு ஒரு கருணை இல்லம் நடத்துங்கள்.

12.  பொறுமையாய் எளியவரது அவல நிலையின் சோகக் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்க நேரமெடுங்கள்.

13. அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தியுங்கள். அவர்கள் சரியான சிகிச்சை பெறுகிறார்களா என்று பாருங்கள். இல்லையேல் மருத்துவர்களைச் சந்தித்து ஆவன செய்யுங்கள். குழந்தைகள் பிரிவிலுள்ள மிகச்சுகவீனமான குழந்தைகளுக்கு விளையாட்டுச்சாமான்கள் கொடுங்கள்.

14. ஏழைகளைச் சிகிச்சைக்கு மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்.

15. விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்குவிவாகம் செய்து வையுங்கள்.

16. உங்கள் அண்மையிலுள்ள வறிய குடும்ப மொன்றைத் தெரிந்துகொண்டு அவர்கள் வாழ்வை முன்னேற்றுங்கள்.

17. எளியவரின் உரிமைகள் மற்றும் வழக்குகளுக்காடீநு வாதாடுங்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் நிலம் அபகரிக்கப்படும்போது தலையிடுங்கள்.

18. பிச்சைக்காரருக்காக ஆண்டொருமுறையாவது இஸ்லாமிய விளக்க கூட்டம் நடத்தி பிறகு நல்லதொருஉணவளியுங்கள்.


19. உங்கள் பிறந்தநாள், திருமண நாளன்று ஏழைகளை அழைத்து உணவளியுங்கள்.

20. நிறைய பலகாரங்கள் செய்து அல்லது வாங்கி பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு வரும் ஏழைகளுக்குக் கொடுங்கள்.

21. பள்ளிக்கு வெளியே தருமம் வாங்கக் காத்து உட்கார்ந்திருப்போருக்குகாக அல்லாஹ்விடம் துவா செயுங்கள்

22. எளிய குடும்பம் ஒன்றை எங்காவது விடுமுறைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

23. தோட்டத்தில் விளையும் சிலவற்றை ஏழை எளியவருக்காகப் பிரித்து வையுங்கள்.

24. பரண்கள், பெட்டிகள், அலமாரிகள், அடுக்குத் தட்டுகளைச் சுத்தம் செய்து ஓராண்டிற்கு மேலாகப் பயன்படுத்தாத பொருட்களை கொடுத்து விடுங்கள்.

25. சேரிகளிலும் தாவாவை தொடருங்கள்

26. குட்டிக் குட்டி விளையாட்டுச் சாமான்கள், பலூன்கள் போன்றவற்றை மொத்த விற்பனைக் கடையில் வாங்கி வைத்துக்கொண்டால் ஏழைச்
சிறுவர் சிறுமியர் கண்ணில்படும்போது கொடுத்து மகிழ்விக்கலாம்.

27. பணக்காரருக்கு வெகுமதிகளைக் கொடுத்து அவர்களிடமிருந்து வெகுமதிகளை வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை நிறுத்தி அப்பணத்தை
ஏழைகளுக்குத் திருப்புங்கள்.

28. சேரிவாழ் மக்களுக்குக் கழிவறைகள் கட்டிக் கொடுங்கள்.

29.  விருந்தினர் மற்றும் அயலகத்தார் உங்கள் வீட்டிற்குக் கொண்டுவரும் பலகாரங்களை அவசியமாய்த் தின்றுத் தீர்க்கவேண்டுமென்பது கட்டாயமல்ல.பகிர்ந்து தின்றால் பசியாறும் !

30. ஏழைகளுக்குத் தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்திற்கு உங்கள் பணத்திலும் சொத்திலும் ஒரு பகுதி உயில் எழுதி வையுங்கள்.

31. கைக்கு வரும் சில்லரைக்காசு யாவற்றையும் வறியவருக்கென்று ஒதுக்கி வையுங்கள்.

32. அதிகபட்சம் 10 நல்ல ஆடைகளும் 10 சாதா உடைகளும் வைத்துக் கொண்டு மற்றவற்றைத் தேவைப்பட்டோருக்குக் கொடுத்துவிடுங்கள்.

33. ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்.

34. திருமண அன்பளிப்புகளில் ஒரே பொருள் ஒன்றிற்கும் அதிகமாக வந்தால் அவற்றைக் கடைகளில் மாற்றாமல் பாவப்பட்டவருக்குக் கொடுங்கள். பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கென்று சேமித்து வைக்காதீர்கள்.


35. பிள்ளையின் உடைகளை அடுத்த பிள்ளைக்கெனப் பத்திரப்படுத்தும் பழக்கத்தை விட்டொழியுங்கள். அடுத்தப் பிள்ளை புதுத்துணிதான்
போடட்டுமே!

36. பழைய புத்தகங்களை ஏழைகளுக்கு விநியோகியுங்கள்.

37. இரப்போர் தங்கும் இடங்களில் தஹ்வா நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.

38. உணவுப் பொட்டலங்கள் தயாரித்து பிச்சைக்காரர் தங்குமிடங்களில் விநியோகியுங்கள். விருந்து நாட்களில் பிரியாணி போன்றவை மீதமானால்
உறவினருக்குக் கொடுத்தனுப்பாமல் ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள்.

39. தங்க இடமில்லாதோருக்குக் குடிசைகள் கட்டித் தாருங்கள்

40. எளியோரின் இடிந்த வீடுகளைச் சரிசெய்து உதவுங்கள்.

41. திக்கற்றோரைச் சந்தித்து அவர்கள் வீட்டைச் சுத்தம் செய்து நல்லதொரு உணவு சமைத்துக் கொடுத்து வாருங்கள்.

42. தினந்தோறும் பிச்சைக்காரரைச் சந்திப்பது உங்கள் வேலைக்கு இடையூறானால் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி அல்லது முதல் ஞாயிறு
அவர்களை வரப் பழக்குங்கள். அப்பொழுது அவர்களுக்குப் இஸ்லாத்தை போதித்து, தருமம் கொடுத்து,அனுப்பலாம்.

43. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் வறியவருக்குக் கூடுதல் செலவழிக்கலாம்.

44. சேரிப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் நடத்துங்கள். ஷட்டில் காக், கால் பந்து, கேரம் போர்ட், செஸ் போர்ட் போன்றவை வாங்கிக் கொடுங்கள். ஊஞ்சல் போன்ற சிலவற்றைப் பொருத்திக் கொடுங்கள்.

45. நீங்கள் மருத்துவர் அல்லது தாதியரானால் ஆதிவாசிக் கிராமங்கள் மற்றும் அவைபோன்ற இடங்களில் தங்கி, உங்கள் அறிவையும்
பயிற்சியையும் பயன்படுத்தி மக்களை உங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் முன்னேற்றுங்கள்.

46. எளியவரின் வீடுகளுக்கு விஜயம் செய்து அவர்களது நண்பராயிருங்கள். அவர்களது திருமணங்கள், மரணங்கள் மற்றும் பிற வைபவங்களில் கலந்துகொள்ளுங்கள்.

47.சாலையோரத்தில் யாரேனும் விழுந்து கிடப்பதைக் கண்டால் நில்லுங்கள். உயிரோடிருக்கிறாரா என்று பாருங்கள். செத்திருந்தால் நல்லடக்கம்
செய்ய நகராட்சிக்கு அறிவியுங்கள். உயிருடனிருந்தால் ஆவன செய்து உதவுங்கள்.

48.தேய்ந்த செருப்பு மற்றும் கிழிந்த உடைகளைச் செப்பனிட்டுப் பயன்படுத்தாமல் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் அவர்கள் சில மாதங்கள்
அவற்றை அனுபவிக்கலாமே.


 49. .உங்கள் வருமானம் மற்றும் சொத்தில் இரண்டரை  சதவிகிதத்தை (ஜக்காதை) ஏழைகளுக்காக ஒதுக்கி வையுங்கள். செல்வந்தர்கள் அனைவரும் அப்படி ஒதுக்கினாலே போதும் இவை அனைதையும் செய்துமுடித்து விடலாம்

50 இவை அனைத்தும் நம்மை விட பணகாரர்களிக்கு என்று எண்ணி விடாமல் நம்மால் எது எது முடியுமோ அதை செய்யுங்கள்

கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்அது"டேய் கிருஸ்தவ மிச்னரிகளை பார்த்தாவது திருந்துங்கடா" சாரி மனித்து விடவும்

Friday, October 19, 2012

தாய்பாலின் மகத்துவம்..!!!

தாய்பாலின் மகத்துவம்..!!!
தாய்பாலின் மகத்துவம்..!!!
தாய்பாலின் மகத்துவம்


(இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவருக்கும் உண்டாகட்டும்)

இன்று நிறைய பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. ஒரு சில பெண்களைத் தவிர..மற்றப் பெண்களுக்கு வேலைக்கு போவது ஒரு காரணமாக இருக்கலாம், அவர்களின் எண்ணமும்.. பாலில் என்ன வந்தது டாக்டர் சொல்லும் புட்டிப் பாலை வாங்கி கொடுத்தால் போதும் என நினைக்கின்றனர்.. ஆனால் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும், புட்டிப் பால் கொடுத்து வளர்க்கும் குழந்தைக்கும் அறிவுத் திறனில் வித்தியாசம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு ஒவ்வாமை, வலிப்பு போன்ற பிற நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைவு..


தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும், அபரிதமான நோய் எதிர்ப்பு சக்தியும், எளிதில் செரிமானமாகக் கூடியத் தன்மையும் இருக்கிறது. நாம் புட்டிப் பாலை என்ன தான் விலை கொடுத்து வாங்கினாலும் இதற்கு ஈடு வராது. இது "அல்லாஹ்வின் அருட் கொடையாகும்".


மேலும் பாலூட்டும் தாய்க்கு கர்ப்பப்பை புற்று நோய், மார்பக புற்று நோய் வரும் வாய்ப்புக்கள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவு ஏற்படுகிறது.


ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு தாயின் கடமை. இந்த காலகட்டத்தில் வேலைக்கு போகாமல் இருப்பதே நல்லது..


ஆனால், எனக்கு பொருளாதாரப் பிரச்னை போய் தான் ஆக வேண்டும் என்றால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில அனுமதி பெற்று தகுந்த இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க முயற்சி எடுங்கள். அது தான் இருவருக்கும் நல்லது..


நம் மார்க்கத்தில் திருமறையின் கூற்று தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும் (குர்ஆன் 2: 233)

நம் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்க முடியாது. அதற்கு தகுந்த பதிலை நாம் சொல்லியாக வேண்டும்..


சமீபத்தில் ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என கண்டறிந்துள்ளனர்.


ஒவ்வொரு தாயும் தன குழந்தை நோய்நொடி இன்றி நல்ல ஆரோக்கியத்தோடும், நல்ல அறிவுக்கூர்மையோடும் இருப்பதை தான் விரும்புவாள். அதற்கு தாய்ப்பால் பெருமளவில் உதவுகின்றது என்றால் அது மிகையில்லை..


மாட்டுபால் கன்றின் தாய் பால் அது கன்றுக்கு மட்டுமே அறிவு புகட்டும்

Thursday, October 18, 2012

புதைலோ புதையல்..! உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் புதைலோ புதையல்.!

புதைலோ புதையல்..! உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம்ஆப்கானிஸ்தானில் பெரும் புதைலோ புதையல்..!















உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம்ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.


போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், 










"ஆப்கானிஸ்தானில் 



இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.

இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.

இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி. இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.

இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டாலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.



ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'unobtinum' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் அறிவிப்பு





பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் 

அறிவிப்பு.............!!




அல்லாஹு அக்பர்............!! அல்லாஹு அக்பர்............!!

இஸ்லாத்தை ஏற்ற போது நான் பெற்ற அமைதி இன்னும் என்னை விட்டு விலகவில்லை, 
இனியும் விலகாது...............!!

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனி லாரன் பூத் அறிவிப்பு.............!!

அல்ஹம்துலில்லாஹ்...............!!