Monday, December 31, 2012

பிரபல பிலிப்பைன் நடிகை குயின் படெல்லா இஸ்லாத்தை தழுவினார்.............!!

                           எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

பிரபல பிலிப்பைன் நடிகை குயின் படெல்லா இஸ்லாத்தை தழுவினார்..!!



                           இறைவனின் மாபெரும் கிருபையினால் பிலிப்பை

இறைவனின் மாபெரும் கிருபையினால் பிலிப்பைன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகையான குயின் படெல்லா புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்,

அவர் இஸ்லாத்திற்கு மாறிய பின் இஸ்லாம் கூறியுள்ள பர்தா அவருக்கு முழுமையான பாதுகாப்பை தருவதாக கூறியுள்ளார், மேலும் இஸ்லாத்தை பற்றிய பல்வேறு சுவாரஷ்யங்களை கூறியுள்ளார்.

Sunday, December 30, 2012

எளிமையின் அடையாளம் ஈரான் அதிபர் அஹமத் நஜாதி

                    இவரு யாருன்னு உங்களுக்கு தெரியுமா ?  
அமெரிக்கா,இஸ்ரேல்,இங்கிலாந்து போன்ற நாடுகள் பார்த்து பயப்படும்     ஈரான் அதிபர் அஹமத் நஜாதி (கிழிந்த சட்டையுடன்)
                 எளிமையின் அடையாளம் ஈரான் அதிபர்   

                                     அஹமத் நஜாதி


                                       கிழிந்த உடையுடன் ஒரு நாட்டின் அதிபர்

 

 

                                                     ஏழைகளுடன் விருந்து                                                      

                                         
                                          சதாரண மக்களை அரவணைப்பதில்





பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறுப்புஇது பற்றி மக்கள் கருத்து

30/12/12
பர்தா பேச்சு - மன்னிப்பு கேட்க முடியாது மதுரை ஆதினம் மறுப்பு............!!


பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக தமிழக, இந்தியப் பெண்கள் அனைவரும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா அணிய மதுரை ஆதினகர்த்தர் பரிந்துரைத்திருந்தார். அருணகிரிநாதரின்இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு கேட்கும் படி கோரியிருந்தது.

ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.

--------------------------------------

மக்கள் கருத்து :

பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் எந்த தவறும் இல்லை,



பாஜக வினர் சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்த்தது, பாஜக அலுவலகத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து காமலீளைகளுக்கும் பின்னணியில் பாஜக வும், இன்னபிற இந்துத்துவ இயக்கங்களும் இருப்பதால்....

மேற்கொண்டு இந்திய பெண்களின் வாழ்வை சீரழிக்க பர்தா தடையாகி விடும் என்ற அச்சத்தில் பாஜக வே பெண்கள் அமைப்பை ஏவி விடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்,

பாஜக வின் காமலீலைகள் புரியாத பெண்களும் போராட்டம் என்ற பெயரில் சீன் போடுவது வருந்ததக்கது

பர்தாவின் அவசியம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேட்டியிலிருந்து

30/12/12

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் 

பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை 

ஆதீனம்............!!அருணகிரிநாதர் பேட்டி.




"இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா 


அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் 


பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் 


பர்தா அணிய வேண்டும். இதன்மூலம் ஆண்களின்

வக்கிரப் 
பார்வையிலிருந்து பெண்கள் தப்பமுடியும்


பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் 


என்று" மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 


கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்

 
இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம், 


கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது 


உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக


இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். 



இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் 

பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது 


அவசியம், இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் 


பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். 


மேலும் பாலியல் குற்றங்களையும் குறைக்க 


முடியும் என்றார் ஆதீனம்.


 
மேலும் 
நித்தியானந்தா குறித்து அவர் கூறும்போது

நித்தியானந்தா வர மாட்டார் நித்தியானந்தா 


மீண்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் வரவே

முடியாது. அவரை மக்களுக்கும் பிடிக்கவில்லை,

அரசுக்கும் பிடிக்கவில்லை, யாருக்குமே

பிடிக்கவில்லை. அவரை இளைய ஆதீனமாக 

நியமித்தபோது அவர் மீது வழக்குகள் குறித்து 

எனக்குத் தெரியாமல் போய் விட்டது. மதுரை 

ஆதீனச் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

அதை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் 

என்றார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.

Tuesday, December 25, 2012

மாறியது எப்படி? கிரிக்கெட் வீரர் யூசுப் பேட்டி

         
   மாறியது எப்படி?  கிரிக்கெட் வீரர்  யூசுப் பேட்டி

  
     அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளனாக யூஸுப் – 



ட்ரூ கால்” islam.thetruecall இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ”முஹம்மது யூஃஸுப்”பிடம் நேருக்கு நேர் கண்ட ”பேட்டி”

உலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.

அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.

ஆமாம்! பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.

ட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.

முஹம்மது யூஃஸுப்: வஅலைக்கும் ஸலாம்.

ட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா? எங்கு எப்படி அதை கழித்தீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.

ட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது? உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்?

முஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது?

முஹம்மது யூஃஸுப்:
சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ”சுன்னா”வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட ‘தர்ஹா’ வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ!)

ட்ரூ கால்:
சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி…?

முஹம்மது யூஃஸுப்:
அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் தப்லீக் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ”ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 – 75 களில் தப்லீக் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.

ட்ரூ கால்:
இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்… இல்லையா?

முஹம்மது யூஃஸுப்:
ஆம்! ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.

ட்ரூ கால்:
இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள்? இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன?

முஹம்மது யூஃஸுப்:
நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ”இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி” என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த ‘அழைப்புப்பணி’யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படியே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.

ட்ரூ கால்:
குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா? நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது நபி அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா? முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.

ட்ரூ கால்:
(இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே! குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?

என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ”இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல” என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ!)

ட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.

ட்ரூ கால்:
நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது?

முஹம்மது யூஃஸுப்:
அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.

ட்ரூ கால்:
நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே! ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.
ஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி அவர்களின் ”சுன்னா”வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடினமான காரியமல்ல.

ட்ரூ கால்:
நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது?

முஹம்மது யூஃஸுப்:
ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் அவர்களின் வழிமுறையான ”சுன்னா” வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.

ட்ரூ கால்:
உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

முஹம்மது யூஃஸுப்:
இஸ்லாத்தை மதிப்பவராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.

ட்ரூ கால்:
உங்களின் பரபரப்பாக நேரத்தில் ”பேட்டி” அளித்தமைக்கு மிக்க நன்
றி.


முஹம்மது யூஃஸுப்: جَزَاكَ اللَّهُ خَيْرًا – Jazaakallaahu khairan
தமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

    இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது       
                                     நீண்ட  ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.



இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் இயேசு ஒரு முஸ்லிம் ? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது .

மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.

“இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார்.

பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது.

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என புத்தகம் எழுதி உள்ள இந்த ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் Robert F. Shedinger ஒரு கிறிஸ்துவர் என்பது குறிப்பிட தக்கது.

ஆண் மற்றும் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும் …


 
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ…
்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.
7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.
ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.
*அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:*
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள். 
நன்றி:- சத்தியப்பாதை

பெண் பொலிஸார் இஸ்லாத்தை ஏற்றனர்

பிரான்ஸில்பர்தா அணிந்தவர்களை விசாரித்த பெண் பொலிஸார் இஸ்லாத்தை ஏற்றனர்


பிரான்ஸில்பர்தா அணிந்தவர்களை விசாரித்தபெண் பொலிஸார் இஸ்லாத்தை ஏற்றனர் 10:02  பிற்பகல் PUTHIYATHOOTHU NO COMMENTS ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த
ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
தெரிவித்தார். மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர

Thursday, December 20, 2012

பெல்ஜியம் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய 92 வயது மூதாட்டி

               பெல்ஜியம் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய 92 வயது மூதாட்டி


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

பெல்ஜியம் நாட்டில் இஸ்லாத்தை தழுவிய 92 வயது மூதாட்டி...........!!

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் பெல்ஜியம் நாட்டில் 92 வயதான Georgette என்ற கிறித்தவ மூதாட்டி புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை இஸ்லாத்தை தழுவினார்


ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை 

 சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார் 

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

ஜப்பான் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா இஸ்லாத்தை தழுவினார்...........!!

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் ஜப்பான் நாட்டின் குத்து சண்டை பெண் வீராங்கனை சிக்கா நகமூரா புனிதமிக்க தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை காலிதா என மாற்றிக் கொண்டார்

ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞர் இஸ்லாத்தை தழுவினார்...........!!

      ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவர் இஸ்லாத்தைதழுவினார் 






எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!! 

ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞர் இஸ்லாத்தை தழுவினார்...........!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் ரஷ்ய திருச்சபையை சேர்ந்த கிறித்தவ அறிஞரான Vyacheslav Polosin என்ற சகோதரர் புனிதமிக்க இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள், மேலும் அவர் தனது பெயரை அலி என மாற்றிக் கொண்டார்கள் 

இந்த அறிஞர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து இஸ்லாத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Wednesday, November 28, 2012

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் என்ற யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் 

இஸ்லாத்தைத் தழுவினார் . இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு 

வசனம்.

மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:

அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.
அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.
அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.


இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

- மௌலவி அ.முஹம்மது கான் பாகவி 

நன்றி : www.jaffnamuslim.com

Sunday, November 18, 2012

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு................!!

கும்மியடி பெண்ணே கும்மியடி அலை அலையாய் மக்கள் கூட்டம் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணை வைப்பை விட்டும் இணைவது கண்டு மனம் மகிழவே கும்மியடி



அல்லாஹு அக்பர்...........!! அல்லாஹு அக்பர்.............!! 

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..............!! 

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவிய வரலாறு...........
.....!! 

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும், தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்,

தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்...

ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம் கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது,

அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது, அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார் மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்,

அந்த நேரத்தில் கெமரூன் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த சவூதிஅரேபியா சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் ராபிஆ அவர்கள் அந்தக் குழந்தையை தனித்தனியாகப் பிரித்து எடுக்கும் பொறுப்பையும் செலவையும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்தார்,

ஏப்.21, 2007 அன்று சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகளுக்கு 16 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 65 மருத்துவர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக இரு குழந்தைகளையும் பிரித்து எடுத்தனர்,

இந்தச் செய்தி பபான்கி கிராமத்திற்குக் கிடைத்தவுடன் அந்தப் பழங்குடி இன மக்கள் வாழும் கிராமமே சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர், சவூதி மருத்துவ வரலாற்றில் இது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது,

அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர் ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர்.

அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்,

இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக பபான்கி கிராமத்தில் இருந்து சுல்தான் ஒமர் என்ற அந்த பழங்குடி இன முக்கியஸ்தர் தலைமையில் 26 பேர் வந்திருந்தனர், அவர்கள் டாக்டர் அல் ரபீஆ அவர்களுக்கும் அறுவை சிகிச்சையின் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்ட சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தற்போது தலா ஒவ்வொரு கால்தான் இருக்கிறது. செயற்கைக் கால் பொருத்துவதற்கு மீண்டும் சவூதி அரேபியா செல்ல இருக்கின்றனர், அந்த குழந்தைகளின் தாய் எமரன்ஸியாவாக இருந்தவர் தற்போது ஆயிஷா என்றும், தந்தை நகோங் ஜேம்ஸ் அகும்பு தற்போது அப்துல்லாஹ் என்றும் மாறி தீனுல் இஸ்லாத்தைக் கடைபிடித்து பிறருக்கும் வழிகாட்டி வருகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்............!!





கும்மியடி பெண்ணே கும்மியடி அலை அலையாய் மக்கள் கூட்டம் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணை வைப்பை விட்டும் இணைவது கண்டு மனம் மகிழவே கும்மியடி
நன்றிசங்கை ரிதுவான் (பக்கம்)

https://www.facebook.com/Sangairidhvan

Saturday, November 17, 2012

இஸ்லாத்தில் இணந்தார் ஜெர்மன் விஞ்ஞானி!

Jewish scientist Robert kilham



அலலை அலலையாய் மக்கள் கூட்டம் 
இஸ்லாத்தில் இணைவது கண்டு பாரிர் 
எங்கள் நெஞ்சில் உள்த்தை பாரிர்

இஸ்லாத்தில் இணந்தார் ஜெர்மன் விஞ்ஞானி!-நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம். முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார
். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார். ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில், தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும், யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும், இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார். பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார். பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார். ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார். மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும். மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார் மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்! இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார். வ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்! இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.